Advertisment

'உங்கள் உயர்திரு வந்தியத்தேவன்' - களத்தில் இறங்கிய கார்த்தி

ponniyin selvan karthi and jayam ravi changed his name in twitter

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் உள்ளிட்ட பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடித்துள்ள பொன்னியின் செல்வன் படம் வருகிற 30 ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. படம் திரைக்கு வருவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ப்ரொமோஷன் பணிகளில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகின்றனர் படக்குழு.

Advertisment

அதன் ஒரு பகுதியாக த்ரிஷா, விக்ரம் இருவரும் தங்களது ட்விட்டர் கணக்கு பெயரை 'குந்தவை' மற்றும் 'ஆதித்ய கரிகாலன்' என்று பெயர் மாற்றம் செய்தனர். இவர்களை தொடர்ந்து தற்போது கார்த்தியும், தனது ட்விட்டர் கணக்கு பெயரை 'வந்தியத்தேவன்' என மாற்றியுள்ளார். மேலும் ஜெயம்ரவி 'அருண்மொழி வர்மன்' என்று தனது ட்விட்டர் கணக்கு பெயரை மாற்றியுள்ளார்.

Advertisment

இப்படத்தில் த்ரிஷா குந்தவை கதாபாத்திரத்திலும் விக்ரம் ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்கள். மேலும் கார்த்தி வந்தியத்தேவன் கதாபாத்திரத்திலும் ஜெயம் ரவி அருண் மொழிவர்மன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

actor karthi jayam ravi manirathnam ponniyin selvan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe