இந்திய அரசு சார்பில் திரைத்துறை மற்றும் திரைத்துறைக் கலைஞர்களைக் கௌரவிக்கும் வகையில் தேசிய விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. கரோனா காரணமாக 2019 ஆம் ஆண்டிலிருந்து இரண்டு ஆண்டுகள் தள்ளி இந்த விருது அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2022 ஆம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ் திரைப்படங்களில் பொன்னியின் செல்வன் 1 படம் 4 தேசியவிருதுகளை அள்ளியுள்ளது.
சிறந்ததமிழ்திரைப்படத்திற்காக மணிரத்னத்துக்கும், சிறந்த பின்னணி இசைக்காகஏ.ஆர் ரஹ்மானுக்கும், சிறந்த ஒளிப்பதிவிற்காக ரவி வர்மன் மற்றும் சிறந்த ஒலி வடிவமைப்பிற்காக ஆனந்த் கிருஷ்ணமூர்த்திக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர்த்து திருச்சிற்றம்பலம் படம் 2 தேசிய விருதுகள் வென்றுள்ளது. சிறந்த நடிகைக்கான விருதுநித்யாமேனனுக்கும், சிறந்த நடன இயக்கம் என்ற பிரிவிற்காக ஜானி மற்றும் சதீஷ்ஆகியோருக்கும்அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழ் பிரபலங்களான சண்டை இயக்குநர்கள்அன்பறிவுக்குகே.ஜி.எஃப் 2படத்திற்காகசிறந்த சண்டைபயிற்சிக்கானவிருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான பொன்னியின் செல்வன் நல்ல வரவேற்பை பெற்று ரூ. 500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. தனுஷ், நித்யா மேனன நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.