செக்கச்சிவந்த வானம் படத்தை தொடர்ந்து மணிரத்னம் தற்போது தன்னுடைய கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் கடந்த டிசம்பர் மாதம் 11ஆம் தேதி தாய்லாந்தில் தொடங்கப்பட்டது.

இந்த படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், ரியாஸ் கான், பிரபு உள்ளிட்ட பலர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் முதற்கட்ட ஷூட்டிங்கில் நடிப்பதற்காக கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம், ரியாஸ் கான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அமரர் கல்கியின் எழுத்தில் உருவான பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்படும் இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
தாய்லாந்தில் சுமார் 27 நாட்கள் நடைபெற்ற இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து படக்குழு சென்னை திரும்பியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதை இப்படத்தில் நடிக்கும் ரியாஸ் கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இப்படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் சென்னையில் பிரம்மாண்ட செட் அமைத்து உருவாக்கப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது. இதில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படும் எனத் தெரிகிறது.