பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்கான டைட்டில் லுக் போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

ponniyin selvan

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பொன்னியின் செல்வன்'. எழுத்தாளர் கல்கி எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் எடுக்கப்படுகிறது. இரு பாகங்களாக உருவாகும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. பல்வேறு தடங்கல்களுக்குப் பிறகு தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்றுவந்த நிலையில், கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

தற்போது கரோனா பரவலின் தாக்கம் குறையத் தொடங்கியதையடுத்து, மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ள பொன்னியின் செல்வன் படக்குழு, இறுதிகட்டப் படப்பிடிப்பில் முழுவீச்சில் ஈடுபட்டுவருகிறது. இந்த நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்திற்கான டைட்டில் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில்,பொன்னியின் செல்வன் முதல் பாகம் அடுத்த வருடம் வெளியாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

manirathnam
இதையும் படியுங்கள்
Subscribe