Advertisment

வசூலில் புதிய உச்சம் தொட்ட 'பொன்னியின் செல்வன்'

ponniyin selvan biggest ever opening day Tamil cinema rs 80 Crores worldwide

Advertisment

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் உள்ளிட்ட பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடித்துள்ள பொன்னியின் செல்வன் படம் நேற்றுதிரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகியது. கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து உலகம் முழுவதும்திரையரங்குகளில் வெளியாகியுள்ள இந்த படம் பெரும் வரவேற்பை பெற்று வருவதோடு, வசூலை வாரிக் குவித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் படக்குழு பொன்னியின் செல்வன் படத்தின் முதல் நாள் வசூலைவெளியிட்டுள்ளது. அதில் பொன்னியின் செல்வன் திரைப்படம் முதல் நாள் உலகளவில்ரூ.80 கோடிக்கும்மேல் வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பொன்னியின் செல்வன் படம் இதுவரை வெளியான தமிழ் சினிமா திரைப்படங்களில் முதல் நாளில் அதிகம் வசூல் செய்த படம் என்ற சாதனை படைத்துள்ளது. இதில் தமிழ் நாட்டில்மட்டும் ரூ.27 கோடிக்குமேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. வார இறுதி நாட்கள் மற்றும் ஆயுதபூஜை, விஜயதசமி விடுமுறை வருவதால் இனி வரும் நாட்களில் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கக்கூடும் என கூறப்படுகிறது.

maniratnam actor vikram ponniyin selvan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe