'வருகிறான் சோழன்' - ட்ரைலர், ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு

ponniyin selvan audio trailer release date announced

இந்த ஆண்டின் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கிறது 'பொன்னியின் செல்வன்'. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'லைகா' நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். எழுத்தாளர் கல்கி எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் 'பொன்னியின் செல்வன்' படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன் படி வருகிற செப்டம்பர் 6-ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியாகவுள்ளது. இதனை படக்குழுவினர் தங்களது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இப்படத்தின் பொன்னி நதி மற்றும் சோழா சோழா பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.

actor vikram ar rahman manirathnam ponniyin selvan
இதையும் படியுங்கள்
Subscribe