Advertisment

யாக்கை திரி; காதல் சுடர் - ட்ரெண்டாகும் திரிஷா, சித்தார்த் வீடியோ

ponniyin selvan audio launch trisha, siddharth video trending in social media

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் உள்ளிட்ட பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடித்துள்ள படம் பொன்னியின் செல்வன். எழுத்தாளர் கல்கி எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் பான் இந்தியா படமாக வரும் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனையொட்டி இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் ரஜினி, கமல் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர். மேலும் ஐஸ்வர்யா ராய், திரிஷா, சித்தார்த் உள்ளிட்ட பல முன்னணி திரைபிரபலங்கள் கலந்து கொண்டனர்.

Advertisment

இந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர் ரஹ்மான் தலைமையில் இசை கச்சேரி நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக 'ஆயுத எழுத்து' படத்தில் இடம்பெற்ற 'யாக்கை திரி காதல் சுடர்' பாடலை மேடையில் இருந்த கலைஞர்கள் பாடினார்கள். அப்போது திரிஷா மற்றும் சித்தார்த் இருவரும் கொண்டாடி ரசித்தனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது.

Advertisment

ar rahman siddharth trisha ponniyin selvan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe