/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/13_65.jpg)
இந்த ஆண்டின் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கிறது 'பொன்னியின் செல்வன்'. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'லைகா' நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். எழுத்தாளர் கல்கி எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் 'பொன்னியின் செல்வன்' படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை 6 மணி முதல் தொடங்கவுள்ளது. பிரமாண்டமாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் ரஜினி, கமல் உள்ளிட்ட பல முக்கிய திரைபிரபலங்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இதனிடையே ட்ரம்ஸ் சிவமணி இசை நிகழ்ச்சி நடக்கும் அரங்கில் இருந்து புகைப்படங்களை பிரத்யேகமாக தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அப்புகைப்படத்தை பார்க்கையில் தனது குழுவுடன் மேடையில் ஒத்திகை பார்ப்பது போல் தெரிகிறது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)