ponniyin selvan all song out now

இந்த ஆண்டின் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கிறது 'பொன்னியின் செல்வன்'. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'லைகா' நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். எழுத்தாளர் கல்கி எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Advertisment

இதனையொட்டி இப்படத்தின் ட்ரைலர்மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் பாடல்கள் முன்கூட்டியே ஸ்பாட்டிஃபை செயலியில் வெளியாகியுள்ளது. ஏற்கனவே வெளியான பொன்னி நதி மற்றும் சோழா சோழாபாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது மீதமுள்ள சொல், அலைகடல், தேவராளன் ஆட்டம் ஆகிய மூன்று பாடல்களும் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment