ponniyin selvan actress Aishwarya Lekshmi next as producer is Kumari

Advertisment

தமிழில் விஷாலின் 'ஆக்ஷன்' படம் மூலம் அறிமுகமான ஐஸ்வர்யா லெக்ஷ்மி 'ஜகமே தந்திரம்', 'பொன்னியின் செல்வன்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார். இதனிடையே தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வரும் இவர் 'கார்கி' படத்தை தொடர்ந்து தற்போது 'குமாரி' என்ற மலையாள படத்தை தயாரித்துள்ளார். மேலும் இப்படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். வருகிற 28ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளதால் புரோமோஷன் பணிகளில் படக்குழு ஈடு பட்டு வருகிறார்கள். இப்படம் புராண இதிகாசம் தொடர்புடைய திரில்லர் ஜானரில் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படம் குறித்து ஐஸ்வர்யா லெக்ஷ்மி கூறுகையில், 'பொன்னியின் செல்வன்' படத்திற்கு பூங்குழலி கதாபாத்திரத்திற்கு கிடைத்த பாராட்டு மிகவும் உத்வேகத்தை அளித்துள்ளது. குமாரி படம் முப்பது நாட்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில், முத்தான மூன்று கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன்" என்றார்.

Advertisment

ஐஸ்வர்யா லட்சுமி, தற்போது விஷ்ணு விஷால் நடிப்பில் தயாராகி வரும் ‘கட்டா குஸ்தி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் இயக்குநர் பிரியா இயக்கத்தில் தயாராகி வரும் பெயரிடப்படாத படத்தில் அசோக் செல்வன் மற்றும் வசந்த் ரவி ஆகியோருடன் இணைந்து நடித்து வருகிறார். மலையாளத்தில் ‘கிறிஸ்டோபர்’ படத்தில் மம்முட்டிக்கு மகளாகவும், ‘கிங் ஆஃப் கோதா’ படத்தில் துல்கர் சல்மானின் ஜோடியாகவும் நடித்து வருகிறார். இதோடு சாருகேஷ் சேகர் எழுதி இயக்கியுள்ள அம்மு படத்தில் நடித்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ள இப்படம் வரும் 19 ஆம் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகவுள்ளது.