'எம் தமிழ் வாழ்க... நற்றமிழ் வாழ்க...' - வைரலாகும் 'பொன்னியின் செல்வன் 2' வீடியோ

ponniyin selvan 2 Veera Raja Veera  Lyrical video released

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பரில் வெளியான பொன்னியின் செல்வன் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. வசூலிலும் 500 கோடி ரூபாய்க்கும் மேல் ஈட்டி சாதனை படைத்தது.

சமீபத்தில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் பாடல்கள் மட்டும் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர் துரைமுருகன், நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், சிம்பு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு படக்குழுவை வாழ்த்தினர். தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.

இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனால் ப்ரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், பொன்னியின் செல்வன் பட முதல் பாகத்தை வருகிற 21 ஆம் தேதி (21.04.2023) மீண்டும் வெளியிட மணிரத்னம் திட்டமிட்டுள்ளதாக பார்த்திபன் அண்மையில் தெரிவித்திருந்தார். இன்னும் அது குறித்த அதிகாரப்பூர்வஅறிவிப்பு வெளியாகாத நிலையில் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இப்படத்தின் 'வீரா ராஜ வீர...' பாடலின் லிரிக்கல்வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்தப்பாடலைப் பார்க்கையில் அருண்மொழிவர்மனை பற்றியும் அவரது காதல் குறித்தும் தமிழ் மொழி குறித்தும் விவரிக்கும் படியாக அமைந்துள்ளது. இப்பாடலை சங்கர் மகாதேவன், கே.எஸ்.சித்ரா மற்றும் ஹரிணி ஆகியோர் சேர்ந்து பாடியுள்ளனர். பாடலுக்கு வரிகளைஇளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ளார். இதில் இடம்பெற்ற 'எம் தமிழ் வாழ்க வாழ்க... வீர சோழம் வாழ்க, நற்றமிழ் வாழ்க வாழ்க...' என்று வரும் வரிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இப்பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ar rahman jayam ravi maniratnam Ponniyin Selvan 2
இதையும் படியுங்கள்
Subscribe