சோழர்கள் மீண்டும் வருகிறார்கள் - பொன்னியின் செல்வன் 2 அப்டேட் வெளியீடு

ponniyin selvan 2 release update

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த செப்டம்பரில் வெளியான படம் பொன்னியின் செல்வன். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, வசூல்ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது. இதுவரை உலக அளவில் 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது.

இந்த நிலையில், 'பொன்னியின் செல்வன் 2' படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்டை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனைத்தங்களது சமூக வலைத்தளத்தில் அறிவித்த படக்குழு, இது தொடர்பான வீடியோவையும் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ தற்போது ரசிகர்களின் கவனத்தைப் பெற்று வைரலாகி வருகிறது.

lyca manirathnam Ponniyin Selvan 2
இதையும் படியுங்கள்
Subscribe