/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/07_15.jpg)
மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் உள்ளிட்ட பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடித்துள்ள 'பொன்னியின் செல்வன் 1' படம் வருகிற 30 ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. படம் திரைக்கு வருவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ப்ரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் படக்குழு.
இந்நிலையில் 'பொன்னியின் செல்வன் 1' படத்தை படக்குழு சென்சாருக்கு அனுப்பியுள்ளது. சென்சார் போர்ட் இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இது தொடர்பான புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. அதில் இப்படம் 2 மணிநேரம் 47 நிமிடம் ஓடும் என குறிப்பிட்டுள்ளது. இதனிடையே 'தேவராளன் ஆட்டம்' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)