
தமிழ் சினிமாவில் சண்டைக் கலைஞராக அறிமுகமாகி பின்னர் வில்லன் தற்போது காமெடி நடிகராக வலம் வருபவர் பொன்னம்பலம்.
சீறுநீரகப் பிரச்சனை காரணமாக சென்னை அடையாறு பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய சிகிச்சைக்கு மக்கள் நீதி மய்யம்கட்சித் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் உதவியுள்ளார். தினமும் பொன்னம்பலத்தின் உடல்நிலை குறித்து தொலைபேசியின் மூலம் விசாரித்தும் வருகிறார்.
மேலும் இந்தச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அவரின் இரண்டு குழந்தைகளின் படிப்புச் செலவினை கமல்ஹாசன் ஏற்றுக்கொண்டுள்ளார். கமல்ஹாசன் தொகுத்துவழங்கிய பிக்பாஸ் சீஸன் 2 நிகழ்ச்சியில்,பொன்னம்பலம் போட்டியாளராகப் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)