Skip to main content

புது ஸ்டைலில் 'பொன்மகள் வந்தாள்'  பட புரொமோஷன்!

Published on 29/05/2020 | Edited on 29/05/2020
ponmagal vanthal


ஜோதிகா படத்தின் நாயகியாகவும், படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் கே.பாக்கியராஜ், ஆர்.பார்த்திபன், பிரதாப் போத்தன், பாண்டியராஜன், தியாகராஜன் என ஐந்து இயக்குனர்கள் நடித்துள்ள படம் 'பொன்மகள் வந்தாள்'. 


2டி எண்டெர்டெயின்மெண்ட் சார்பில் ஜோதிகாவும், சூர்யாவும் இணைந்து தயாரித்து, அறிமுக இயக்குனர் ஜே.ஜே. ஃபெரெட்ரிக் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் இன்று (மே 29) அமேசான் ப்ரைமில் வெளியானது. இப்படத்தை பார்த்த திரையுலகினரும், ரசிகர்களும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் புரொமோஷனுக்காக படக்குழு ஒரு புது முயற்சியை கையில் எடுத்துள்ளது. கரோனா வைரஸ் பரவலால், மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், பொன்மகள் வந்தாள் ஜோதிகா புகைப்படத்துடன் அச்சடிக்கப்பட்ட மாஸ்க் படக்குழு சார்பாக இலவசமாக தர உள்ளனர். மேலும், இந்த மாஸ்க்குகளை முழுக்க, முழுக்க பெண்களே தயாரித்துள்ளனர் என்றும் கூறியுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“அமைதியை உடையுங்கள்..” போக்சோ வழக்கு தீர்ப்பு குறித்து ஜோதிகா

Published on 25/09/2021 | Edited on 25/09/2021

 

"Break the peace ..." Jyotika on the verdict in the Pocso case

 

சென்னை பிராட்வே பகுதியைச் சேர்ந்த சிறுமி, உறவினர் வீட்டில் வசித்து வந்துள்ளார். சில காலம் கழித்து அவரது தாய் அவரை அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அந்தச் சிறுமி, வீட்டில் ஜோதிகா நடித்து வெளியான ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தைப் பார்த்துள்ளார். அந்தப் படத்தில் ‘எது நடந்தாலும் தாயிடம் சொல்ல வேண்டும்’ எனும் வசனம் வரும். அதனைக் கண்ட சிறுமி, தனது உறவினர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தனது தாயிடம் தெரிவித்துள்ளார். 

 

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அச்சிறுமியின் தாய், ராயபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்து, அவ்வழக்கு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததது. 

 

இந்த செய்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ஜோதிகா, ‘அமைதியை உடையுங்கள். ஒவ்வொரு முறையும் ஒரு பெண் தனக்காகக் குரல் கொடுத்தால், அவள் அனைத்து பெண்களுக்காகவும் பேசுகிறாள் என்று பொருள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

 

 

Next Story

சானிடைஸர் போட்டா வில்லத்தனமா? 

Published on 27/11/2020 | Edited on 27/11/2020

 

jackie sherof

 

 

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த 2019ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியான படம் 'பிகில்'. இந்தப் படத்தில் ஜாக்கி செராஃப் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். விஜய்யோ ராயப்பன், மைக்கேல் என இரு கதாபாத்திரங்களில் நடித்திருப்பார். கால்பந்தாட்ட வீரரான மைக்கேலை மாநில அணியில் சேர்க்காமல் அவருக்குப் பதிலாக ஒருவரை சேர்த்துவிடுவார் ஜாக்கி செராஃப். இந்த விஷயம் தெரிந்த கேங்ஸ்டர் ராயப்பன், தனது மகனுக்காக கவுன்சில் தலைவராக இருக்கும் ஜாக்கி செராஃபை சந்திப்பார். அங்கு சென்று அவரிடம் முறையிடுவார். அப்போது, ராயப்பன் ஜாக்கி செராஃபின் கையை பிடித்து கோரிக்கை வைப்பார். உடனடியாக ராயப்பனின் கையை எடுக்க சொல்லிவிட்டு, ஜாக்கியின் டேபிலில் இருக்கும் சானிடைஸரை எடுத்து கையில் தடவிக்கொள்வார். அதையும் ராயப்பன் பார்த்துவிடுவார். இந்தக் காட்சியின்போது விஜய் ரசிகர்களும் கொதித்து எழுந்தனர். எளியவர்களை தொட்டால் உடனே சானிடைஸர் பயன்படுத்துவது என்பது ஆணவத்தின் வெளிப்பாடாக, வில்லத்தனத்திற்கான ஒரு சிம்பாலிஸமாக தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமாவில் இருக்கிறது.

 

இதே போல லாக்டவுன் சமயத்தில் வெளியான ஜோதிகா நடித்த ’பொன்மகள் வந்தாள்’ படத்திலும் பணக்கார வில்லனான தியாகராஜன், தன்னிடம் உதவி என்று கேட்டு வரும் பெண்மணி அவருடைய கையை பிடித்து மன்றாட, பின்னர் அவர் சென்ற பிறகு கையில் சானிடைஸரை போட்டுக் கொள்வார் தியாகராஜன். இவ்விரு படங்களில் மட்டுமல்ல பணக்கார வில்லன், ஆணவ மனப்பாண்மை கொண்ட வில்லன்களாக மக்களுக்குக் காட்ட இந்த சானிடைஸரை பயன்படுத்துவது ஒரு கருவியாக அல்லது டெம்பிளேட் காட்சியாக இருக்கின்றது. ஏனென்றால் வணங்குவதும் கைகொடுப்பதும் கட்டித் தழுவுவதும் அன்பின் வெளிப்பாடாக இருந்தன. அதைத் தாண்டி நமது  அன்றாட வாழ்வில் ’கையை சுத்தப்படுத்த தண்ணீர் ஊற்றி கையை கழுவினால் போதும், இதுக்கு வேற ஒன்னு காசு கொடுத்து வாங்கனுமா?’ என்றுதான் மக்கள் தொகையில் பெரும்பாலானோரின் நினைப்பாக இருந்தது. இது அனைத்தையும் கரோனா மாற்றிவிட்டது. இன்று யாரை சந்தித்தாலும் வணங்க மட்டுமே செய்கிறோம். சானிடைஸர் பயன்படுத்துபவது நல்ல பண்பாக மாறியிருக்கிறது. இந்த மாற்றம் படம் பார்க்கும்போது நமக்கு ஏற்படும் உணர்வையும் மாற்றியிருக்கிறதோ என்ற கேள்வி ‘சூரரைப் போற்று’ பார்க்கும்போது ஏற்படுகிறது. 

 

அண்மையில் சூர்யா நடிப்பில் வெளியான ’சூரரைப் போற்று’ படத்தில் அதிகாரமிக்க ஆணவத்தில் இருக்கும் பணக்கார வில்லனை சித்தரிக்க இந்த சானிடைஸர் மெதட்டும் பயன்படுத்தப்பட்டது. அவர்கள் காட்டும் காலகட்டத்திற்கு அந்தக் காட்சி மிகப் பொருத்தமாகவே இருக்கிறது. ஆனால், இந்த படம் வந்திருக்கும் கரோனா சமயம் உலகமே கைகளில் இருக்கும் கிருமிகளை அழிக்க சானிடைஸரை பயன்படுத்தி வருகிறது. உலக சுகாதார அமைப்பில் தொடங்கி, கிராம பஞ்சாயத்து வரை சானிடைஸர் பயன்படுத்துங்கள் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. கரோனா அச்சுறுத்தலுக்கு பின்னர் சானிடைஸருக்கான டிமாண்ட் அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஒரு கருத்து கணிப்பு படி சானிடைஸர் பயன்பாடு மேலும் மேலும் அதிகரிப்பதால் இந்த சானிடைஸர் நிறுவன சந்தையில் 2026க்குள் 17 பில்லியன் டாலர்களை சம்பாதிக்குமாம். இதுவரை குறிப்பிட்ட சாரார் மட்டுமே பயன்படுத்தி வந்ததால் சானிடைஸரை அப்படி காட்சிப்படுத்த முடிந்தது. ஆனால், இன்றைக்கு பெரும்பாலானோர் இதை பயன்படுத்த தொடங்கிவிட்டனர் என்றபோது, இனியும் பணக்கார வில்லன்களுக்கு இந்த சானிடைஸர் பயன்படுத்துவதுபோல் காட்டினால் வொர்க்கவுட் ஆகுமா?