Advertisment

1.4 கோடி மக்களை மகிழ்வித்த 'பொன்மகள் வந்தாள்' ட்ரெய்லர்! 

vdzv

2டி எண்டெர்டெயின்மெண்ட் சார்பில் நடிகை ஜோதிகாவும் நடிகர் சூர்யாவும் இனணந்து தயாரித்துள்ள 'பொன்மகள் வந்தாள்' படம் வரும் மே 29-ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாக இருக்கிறது. இப்படத்தில் கதையின் நாயகியாக ஜோதிகா நடிக்க, கே.பாக்கியராஜ், ஆர்.பார்த்திபன், பிரதாப் போத்தன், பாண்டியராஜன், தியாகராஜன் என படத்தின் முக்கியக் கதாப்பாத்திரங்களில் ஐந்து இயக்குனர்கள் நடித்துள்ளனர். சுப்பு பஞ்சுவும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜே.ஜே ஃபெரெட்ரிக் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்நிலையில் அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ள 'பொன்மகள் வந்தாள்' படத்தின் ட்ரெய்லர் தொலைக்காட்சி மற்றும் யூடியூப் வாயிலாக 2 கோடிப் பார்வைகளைக் கடந்துள்ளது.

Advertisment

ஸ்ட்ரீமிங் தளங்களில் பல முதல் முயற்சிகளை முன்னெடுத்து வரும் அமேசான் ப்ரைம், அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் 'பொன்மகள் வந்தாள்' படத்தின் ட்ரெய்லரை பிரம்மாண்டமான முறையில் வெளியிட்டுள்ளது. தென்னிந்திய சந்தையில் இருக்கும் எண்ணற்ற ரசிகர்களிடம் சென்று சேர, தமிழ் சினிமாவின் முதல் ஸ்ட்ரீமிங் வெளியீடாக வெளிவரவுள்ள இந்தத் திரைப்படத்தின் ட்ரெய்லர் 21 மே, இரவு 8.43 மணிக்கு, 31 தொலைக்காட்சி சேனல்களில் ஒரே நேரத்தில் ஒளிபரப்பானது. இதுவரை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான ட்ரெய்லர் விளம்பரங்களில் மிகப்பிரம்மாண்டமான விளம்பரமாக இது கருதப்படுகிறது. தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில், ஒரே நேரத்தில், கிட்டத்தட்ட 1.4 கோடி மக்களை இந்த ட்ரெய்லர் சென்று சேர்ந்துள்ளது. தென்னிந்தியாவில் பிரபலமான, முக்கிய நடிகைகளில் ஒருவரான ஜோதிகா நடித்துள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் சன் டிவி, கே டிவி, ஸ்டார் விஜய் டிவி, சன் நியூஸ், சி.என்.என்., நியூஸ் 18 தமிழ், ஜீ தமிழ் உட்பட முக்கிய தொலைக்காட்சி சேனல்கள் அனைத்திலும் இந்த ட்ரெய்லர் ஒளிபரப்பானது. இதோடு சேர்த்து, 'பொன்மகள் வந்தாள்' படத்தின் ட்ரெய்லருக்கு, அமேசான் ப்ரைம் வீடியோவின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்திலும் ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது. 24 மணி நேரத்தில் 60 லட்சம் பார்வைகளை ட்ரெய்லர் பெற்றுள்ளது.

Advertisment

நேர்மையான வழக்கறிஞர் ஒருவர், தவறாக குற்றம்சாட்டப்பட்ட ஒரு அப்பாவிப் பெண்ணை விடுவிக்கும் முயற்சிகளைப் பற்றி பரபரப்பான நீதிமன்ற விசாரணைக் கதைதான் 'பொன்மகள் வந்தாள்'. ஊட்டியில் வசிக்கும் பெட்டிஷன் பெத்துராஜ் என்பவர், 2004-ஆம் ஆண்டு நடந்த தொடர் கொலைகளில் சம்பந்தப்பட்ட, ஆள் கடத்தல், கொலைக்காக தண்டனை அளிக்கப்பட்ட சைக்கோ ஜோதி என்பவரின் வழக்கை மீண்டும் விசாரிக்க ஆரம்பிக்கிறார். இதைச் சுற்றி நடக்கும் விறுவிறுப்பான கதை இது. அவரது மகள் வெண்பா ஒரு தீவிரமான வழக்கறிஞர். உண்மையை வெளியே கொண்டு வர சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளைத் தேடிப் பிடித்துச் சரி செய்கிறார். மேற்பரப்பில் பார்க்கும் எதுவும் கண்ணை ஏமாற்றும் ஒரு மோசமானப் புதிராக இந்த வழக்கு விரிகிறது. பெயருக்காகவும், புகழுக்காகவும் ஆசைப்படுவதாக அவதூறுகளைச் சந்திக்கும் வெண்பா, தன்னை நோக்கி வரும் சவால்களைத் தாண்டி நீதியை நிலைநாட்ட அசராது நிற்கிறார்.2டி எண்டர்டெய்ன்மெண்ட் தயாரித்திருக்கும் 'பொன்மகள் வந்தாள்' படம் 200-க்கும் அதிகமான நாடுகளில், பிரத்யேகமாக ப்ரைம் உறுப்பினர்களுக்கு, வரும் மே 29-ஆம் தேதி முதல் ஸ்ட்ரீமிங்கில் காணக்கிடைக்கும். மேலும் இது அமேசான் ப்ரைம் வீடியோவில் மட்டும் வெளியாகவுள்ளது.

ponmagal vanthaal
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe