poniyin selvan 2 intro video released

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பரில் வெளியான பொன்னியின் செல்வன் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. வசூலிலும் 500 கோடி ரூபாய்க்கும் மேல் ஈட்டி சாதனை படைத்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனால் இந்தியா முழுவதும் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

Advertisment

இந்த நிலையில் 'பொன்னியின் செல்வன் 2' படத்தின் ஒரு முன்னோட்ட வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ முழுவதும் கமல்ஹாசன் பின்னணிகுரலில் அமைந்துள்ளது. படத்தின் கதையை ஒவ்வொரு சூழலுக்கேற்ப வரிகளாக கமல்ஹாசன் விளக்குகிறார். அவர் கூறுகையில், "ஆண்டு 968, சோழர்களின் பூமி ஒரு பெரும் போரை எதிர்நோக்கிக் கொண்டிருந்தது. ராஷ்ட்ரகூடமன்னன் கோட்டிகன் தஞ்சையைத்தாக்க ஒரு பெரும் படையைத்திரட்டிக் கொண்டிருந்தான். வீர பாண்டியனின் சாவிற்குப் பழிதீர்க்க பாண்டிய ஆபத்துபபிகள் சோழ நாட்டிற்குள் ஊடுருவி இருந்தன" என ஒவ்வொரு சூழலை விவரிக்கிறார்.

Advertisment

இதேபோல் முதல் பாகத்தின் ட்ரைலரில் கமல்ஹாசன் குரலில் படத்தின் கதையை விவரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.