Pongal festival release movie list

Advertisment

இந்தியாவில் குறைந்து வந்த கரோனா பரவல் தற்போது மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அந்தவகையில்திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமேதமிழக அரசு அனுமதியளித்தது. இதனால் பெரிய பட்ஜெட் படங்களான 'ஆர்.ஆர்.ஆர்', 'ராதே ஷ்யாம்', 'வலிமை' உள்ளிட்ட பொங்கல் தினத்தன்று வெளியாகவிருந்தபடங்களின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து குறைந்த பட்ஜெட் படங்கள் பொங்கல் ரேஸில் களமிறங்கியுள்ளன. அந்தவகையில்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள 'கொம்பு வச்ச சிங்கம்டா', சதீஸ்நடிப்பில் உருவாகியுள்ள 'நாய் சேகர்', அஸ்வின் நடிப்பில் உருவாகியுள்ள 'என்ன சொல்ல போகிறாய்', பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள 'தேள்', விதார்த் நடிப்பில் உருவாகியுள்ள 'கார்பன்', ராதிகா சரத்குமார் மற்றும் விஜி சந்திரசேகர் நடிப்பில் உருவாகியுள்ள 'மருத', லட்சுமி மேனன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஏ.ஜி.பி' ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அத்துடன் 'ஐஸ்வர்யா முருகன்', 'பாசக்கார பய' உள்ளிட்ட படங்களும்வெளியாகவுள்ளது.பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகவில்லை என்றாலும் 7 க்கும் மேற்பட்ட படங்கள் திரையரங்குகளில் வெளியாவதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.