தமிழர் திருநாளான பொங்கலை முன்னிட்டு, தமிழக மக்கள் அதைக் கொண்டாடத்தயாராகி வருகின்றனர். தொடர் விடுமுறை என்பதால் கடந்த சில தினங்களாக தனியார் நிறுவனங்கள், கல்லூரிகள் எனப் பல்வேறு இடங்களில் கோலாகலமாகபொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
தமிழக அரசு, அனைத்துத் தரப்பு மக்களும்பொங்கலை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக் கரும்பு ஆகியவற்றைபொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கி வருகிறது. மேலும் ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1,000 ரூபாய் கொடுத்து வருகிறது.
இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அப்போது சங்கத்தலைவர் நாசர், உறுப்பினர்களுக்கு பொங்கல் பரிசு மற்றும் கரும்பு ஆகியவற்றை வழங்கினார்.