style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக கே.ஈ. ஞானவேல்ராஜா மற்றும் அபி & அபி நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘காட்டேரி’. ஹாரர் காமெடி திரில்லரக உருவாகியிருக்கும் இந்தப்படத்தில் வைபவ் கதாநாயகனாக நடிக்க, நாயகிகளாக வரலட்சுமி, ஆத்மிகா, சோனம் பஜ்வா ஆகியோர் நடித்துள்ளனர். ‘யாமிருக்க பயமே’ என்கிற வெற்றிப்படத்தை இயக்கிய டீகே இந்தப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார். மேலும் கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், பொன்னம்பலம், சேத்தன், ஜான்விஜய், ரவிமரியா, மைம் கோபி, லொள்ளுசபா மனோகர் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடந்தது. அப்போது நிகழ்ச்சி மேடையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சமீபத்தில் வெளியே வந்த நடிகர் பொன்னம்பலம் பேசியபோது... "இந்தப்படத்தில் மிக முக்கியமான கேரக்டரை இயக்குனர் டீகே எனக்கு கொடுத்துள்ளார். நாங்கள் பிக்பாஸ் வீட்டில் எல்லோருக்கும் பேர் வைப்பது போல, இயக்குனர் டீகேவுக்கு 'டிராகுலா கிங்' என்கிற பட்டத்தை வழங்குகிறேன்" என்றார்.
style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});