வித்தியாசமான ப்ரோமோ வீடியோ... கவனம் ஈர்க்கும் 'மகான்'பட பாடல்

pona povura video song release now

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் படம் 'மகான்'. இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து அவரது மகன் துருவ் விக்ரமும் நடிக்கிறார். மேலும், சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, படக்குழு தற்போது வெளியீட்டு பணியில் தீவிரம் காட்டி வருகிறது.

சமீபத்தில் வெளியான "எவன்டாஎனக்கு கஸ்ட்டடி..." பாடல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில் தற்போதுபோன போவுறபாடலைபடக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை கானா முத்துவுடன், இணைந்து அசல் கோலார் எழுதி பாடியுள்ளார்.வித்தியாசமான முறையில் உருவாகியுள்ள இப்பாடலின் ப்ரோமோ வீடியோ தற்போது சமூகவலைதளைங்களில்வைரலாகி வருகிறது.இப்படம் வரும் 10 ஆம்தேதி நேரடியாக அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

actor vikram dhruv vikram mahaan
இதையும் படியுங்கள்
Subscribe