ரஜினி குணமடைய வேண்டி அரசியல் தலைவர்கள் பிரார்த்தனை  

political leaders wishes to rajinikanth for speec recovery

ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் நடித்துள்ள நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடித்து வருகிறார். இதில் த.செ.ஞானவேல் இயக்கியுள்ள வேட்டையன் படம் வருகிற 10ஆம் தேதி வெளியாகிறது.

இந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் சீரற்ற ரத்த ஓட்டம் மற்றும் செரிமான பிரச்சனை காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பரிசோதனைக்கு பிறகு சில தினங்களில் அவர் டிஸ்சார்ஜ் ஆக உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. பின்பு தமிழக சுகாதாரத்துறை, ரஜினி உடல்நிலை குறித்து அச்சப்படும் வகையில் எதுவும் இல்லை எனவும், பெரிய அளவிலான அறுவை சிகிச்சை எதுவும் செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து ரஜினி பூரண குணமடைய வேண்டி அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் பிரார்த்தனை செய்து வருவதாக தெரிவித்துள்ளனர். அந்த வகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி, காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழிசை சௌந்தர ராஜன், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜி.கே.வாசன், டிடிவி தினகரன், நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமனி, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் தங்களது எக்ஸ் பக்கத்தில் பூரண குணமடைய வேண்டி பதிவிட்டுள்ளனர்.

Actor Rajinikanth political leaders
இதையும் படியுங்கள்
Subscribe