கன்னட திரையுலகைச் சேர்ந்த நடிகைகளான ராகிணி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி ஆகியோர் போதைப்பொருள் பயன்படுத்தியது மற்றும் போதைக் கும்பலுடன் தொடர்பில்இருந்ததாக என்.சி.பி-யால் கைது செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், ராஜினி திவேதி அளித்த தகவலின் பேரில், நடிகர் விவேக் ஓபராயின் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
"ஆதித்யா அல்வா தலைமறைவாக உள்ளார். விவேக் ஓபராயின் வீட்டில் அவரது மைத்துனர் ஆதித்யாஅல்வா இருப்பதாக,எங்களுக்கு சில தகவல்கள் கிடைத்தன. எனவே நாங்கள் சரிபார்க்க விரும்பினோம். எனவே நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டது, குற்றப்பிரிவுக் குழு மும்பையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்றுள்ளது" என்று குற்றப் பிரிவு இணை ஆணையர் சந்தீப் பாட்டீல் கூறியுள்ளார்.