ADVERTISEMENT

ஜெய் பீம்; ராஜாக்கண்ணு சகோதரி மகனுக்கு காவல்துறையால் நேர்ந்த அவலம்

11:14 AM Aug 13, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் 90களில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ‘ஜெய் பீம்’ படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த ராஜாக்கண்ணு என்பவரின் குடும்பத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பான உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்த திரைப்படம் உருவாகி இருந்தது.

இதையடுத்து சூர்யாவின் 2டி நிறுவனம் ராஜாக்கண்ணுவின் மனைவிக்கு நிவாரண தொகை வழங்கியது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் உண்மை கதாபாத்திரமும், ராஜாக்கண்ணுவின் தங்கச்சி மகனுமான கொளஞ்சியப்பன் தனக்கும், தனது குடும்பத்திற்கும் நடந்த உண்மை சம்பவங்களை ஜெய் பீம் பெயரில் படமாக எடுத்துள்ள 2டி நிறுவனம் தனக்கும் உரிமை தொகை வழங்க வேண்டும் என சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், சாஸ்திரி நகர் போலீசார் சம்பந்தப்பட்ட 2டி நிறுவனத்திற்கு உட்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். ஆனால் இதுவரை போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் வரும் 15 ஆம் தேதி அம்பேத்கர் மணிமண்டபம் முன்பு அமர்ந்து போலீசார் நடவடிக்கை எடுக்கும் வரை காலவரையற்ற உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட போவதாக கொளஞ்சியப்பன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த போராட்டத்திற்கு அனுமதி வழங்க கோரி சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு தனது வழக்கறிஞருடன் கொளஞ்சியப்பன் கைலி அணிந்து வந்துள்ளார். அப்போது கொளஞ்சியப்பன் கைலி அணிந்து வந்ததால் அவரை போலீசார் உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர். அதன் பிறகு கைலியை மாற்றி வேஷ்டி அணிந்து வந்து மனு அளித்தார். போலீசாரின் இந்த செயல் தற்போது விவாதத்தை கிளப்பியதுடன், பலரும் தங்களது கண்டனங்களையும் பதிவு செய்து வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT