/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/puneeth_2.jpg)
கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த புனித் ராஜ்குமார் கடந்த மாதம் 29ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார்.இவரது திடீர் மறைவு சினிமா ரசிகர்கள் மற்றும் இந்திய திரைப் பிரபலங்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.இவரதுமறைவுக்கு ரசிகர்கள், பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், நடிகர் புனித் ராஜ்குமார் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டுவருகிறது.இதனைத் தொடர்ந்து, ரசிகர்கள் இருவர் புனித் ராஜ்குமாருக்கு முறையாக மருத்துவம் பார்க்கவில்லை எனக் கூறி அவரது குடும்ப மருத்துவர் ரமணராவ்மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். மேலும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கர்நாடக மாநிலத்தில் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, மருத்துவர் ரமணராவ்வீடு மற்றும் மருத்துவமனைக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)