police lathi charge in Salman Khan fans

ரமலான் பண்டிகை இன்று (11.04.2024) கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அய்யூப் அறிவித்திருந்தார். அதன்படி இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அதனால் காலை முதலே இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து மசூதிகளில் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் ரமலான் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மற்றும் தனது பிறந்தநாளின் வீட்டின் முன் கூடியிருக்கும் ரசிகர்களைச் சந்திப்பார் சல்மான் கான். அந்த வகையில் இன்று மும்பையில் உள்ள சல்மான் கான் வீட்டின் முன்பு, ரமலான் வாழ்த்து பெற அவரது ரசிகர்கள்நூற்றுக்கணக்கில்கூடியிருந்தனர். அப்போது அவர்கள் ஆரவாரம் செய்து கூச்சலிட்டனர். அவர்களால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதனால் அவர்களை தடியடி நடத்தி போலீஸார் அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம்பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

சல்மான் கான், தற்போது ஏ.ஆர் முருகதாஸுடன் கூட்டணி வைத்துள்ளார். இப்படத்தை சஜித் நதியாத்வாலா தயாரிக்க அடுத்த ஆண்டு ரமலான் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இந்த அறிவிப்பு கடந்த மாதம் வெளியான நிலையில், ரமலான் நாளான இன்று படத்திற்கு சிக்கந்தர் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.