கரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பெரும் பீதியைக் கிளப்பியுள்ளது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒன்பது லட்சத்தைக் கடந்துள்ளது. அதேபோல இறந்தவர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே போகிறது.
இந்தக் கரோனா வைரஸால் பல பிரபலங்களும் பாதிக்கப்பட்டு பலியாகி வருகின்ற நிலையில் பிரபல மலையாள நடிகர் மோகன்லால் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதாகச் சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பியவர்களை கேரளபோலீஸ் விசரித்து வருகிறது.இது தொடர்பாக வெளியான வீடியோவில் கரோனா வைரஸ் பாதிப்பினால் நடிகர் மோகன்லால் உயிரிழந்ததாக வதந்திகள் பரப்பப்பட்டன.இதனைப் பரப்பியவர் யார் என்பதை போலீஸார் ஆராய்ந்து வருகின்றனர்.மேலும் இவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்ற வியாழனன்று கரோனா வைரஸ் குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை பாயும் என்று எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.