Police have arrested those who of Lal Singh Sadha illegally  internet

அத்வைத் சந்தன் இயக்கத்தில் அமீர்கான் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'லால் சிங் சத்தா'.இப்படம் 1994ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் டாம் ஹான்க்ஸ் நடிப்பில் வெளியாகி, உலகம் முழுவதும் பல விருதுகளைக் குவித்த ‘ஃபாரஸ்ட் கம்ப்’ படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

Advertisment

இதனிடையே இப்படம் சட்டவிரோதமாக இணையத்தில் வெளியாகியுள்ளது. இதுகுறித்துவயாகாம்18 நிறுவனம் பெங்களூரில் உள்ள பனஸ்வாடி போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தது. அந்தப் புகாரின் பேரில் சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் சிலரை கடந்த 12–ந்தேதி கைது செய்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்தப் படத்தை திருட்டுத்தனமாக இணையத்தில் பதிவேற்றம் செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர் உள்ளிட்ட கருவிகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அத்துடன் இது போன்ற திரைப்படங்களை திருட்டுத்தனமாக இணையத்தில் பதிவேற்றம் செய்வதற்காக ஒரு குழு அமைத்து அவர்கள் செயல்பட்டு வந்ததும்தெரிய வந்தது. மேலும் அவர்களிடம் நடைபெற்ற முதற்கட்டவிசாரணையில்குற்றம் சாட்டப்பட்டவர்கள் தமிழ் ராக்கர்ஸ் மற்றும் பிரைம் ராக்கர்ஸ் போன்ற இணையதளங்களில் திரைப்படங்களை சட்டவிரோதமாக பதிவேற்றம் செய்வதோடு, அவற்றை விநியோகிப்பதிலும் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

Advertisment

இதுபோன்று படங்களை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதன் காரணமாக திரைப்படத் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் இயக்குநர்கள் ஆகியோர் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான கைது நடவடிக்கை என்பது திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு ஒரு நம்பிக்கையை அளித்துள்ளது.

இது குறித்து வயாகாம் 18 நிறுவனத்தின் வழக்கறிஞர் அனில் லாலே கூறுகையில், திருட்டுத்தனமாக திரைப்படங்களைப் பதிவேற்றம் செய்வதற்கு எதிரான போராட்டத்தில் வயாகாம் 18 தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அத்துடன், திருட்டுத்தனமாக திரைப்படங்களை வெளியிடாத நிலையை உருவாக்குவதற்கான எங்கள் முயற்சியை நாங்கள் தொடருவோம். இது போன்ற அத்துமீறலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது முக்கியம் ஆகும். நாங்கள் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது மிகவும் முக்கியம் என்று கருதுகிறோம். அத்துடன் இவ்வாறு செய்கையில் திரைப்படத்துறையை சார்ந்த அனைத்து தரப்பினரும் நிம்மதியாக இருக்க அது வழிவகுக்கும்" என்று தெரிவித்தார்.