/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/biggboss-tharsan.jpg)
தமிழ் பட நடிகையும் மாடலுமான சனம் ஷெட்டியும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர் தர்ஷனும் காதலித்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடைபெற்றுவிட்டதாக சனம் கூறியுள்ளார். ஆனால்தர்ஷன், சனம் ஷெட்டியை திருமணம் செய்வதாக கூறி மறுத்துவிட்டதாக கடந்த வருடம் சர்ச்சை கிளம்பியது.
இந்நிலையில் நேற்று தொடங்கிய பிக்பாஸ் 4நிகழ்ச்சியில் சனம் ஷெட்டியும் ஒரு போட்டியாளராக பங்கேற்றுள்ளார். இதனிடையே தர்ஷன் மீது நடிகை சனம் ஷெட்டி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த ஜனவரி மாதம் புகாரளித்திருந்தார்.
அதில், “கடந்த 2 ஆண்டுகளாக நாங்கள் காதலித்த நிலையில் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த ஆண்டு மே மாதம் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. மேலும் ஜூன் மாதம் திருமணமும் நடக்க முடிவு செய்திருந்த நிலையில், பிரபல தனியார் தொலைக்காட்சியில்நிகழ்ச்சி தொடங்கியதால் நிகழ்ச்சி முடிந்த பின்பு திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தோம்.
மேலும் நமக்கு நிச்சயம் நடந்தது பற்றி வெளியில் கூறினால் பெண்கள் ரசிக்க மாட்டார்கள் என தர்ஷன் கூறினார். தர்ஷன் வெளிநாட்டில் ஷூட்டிங் செல்வதற்கு ரூ.15 லட்சம் வரை செலவழித்தேன். நிகழ்ச்சி முடிந்த பின்பு என்னை திருமணம் செய்துகொள்ள மறுக்கிறார். அவரது பெற்றோரும் அதற்கு உடந்தை. எனவே, என்னை காதலித்து திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய தர்ஷன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நடிகை சனம் ஷெட்டி அளித்த புகாரின்பேரில், நடிகர் தர்ஷன் மீது அடையாறு மகளிர் காவல் நிலைய போலீஸார் பெண் வன்கொடுமை சட்டம், மோசடி உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)