‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ பட இயக்குநர் மீது போலீசில் புகார் 

Police file complaint against Kashmir Files film director vivek agnihotri

90களில் காஷ்மீரில்இருந்து வெளியேற்றப்பட்ட பண்டிட்களின்கதையை மையமாக வைத்து‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தைஇயக்குநர்விவேக் அக்னிஹோத்ரி இயக்கியிருந்தார். சமீபத்தில் வெளியான இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும், கலவையான விமர்சனங்களையேபெற்று வருகிறது.இருப்பினும் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவினர் இப்படத்தை பாராட்டிப்ரொமோட் செய்து வருகின்றனர். இதனிடையேபாஜக ஆளும்ஹரியானா, மத்தியப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் இப்படத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து படத்தின் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி, "போபால் மக்கள் என்றால் ஓரினச்சேர்க்கையை விரும்புபவர்கள்' என்று தெரிவித்திருந்தார். அவரின் இந்த கருத்துக்கு பெரும் எதிர்ப்புகளும், சர்ச்சைகளும் கிளம்பியுள்ளன. குறிப்பாக மத்தியப்பிரதேசத்தில் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. விவேக் அக்னிஹோத்ரி அவரது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்தியப் பிரதேச காங்கிரஸ் வலியுறுத்தியது.

இந்நிலையில், இதுதொடர்பாகஇயக்குநர் விவேக் அக்னிகோத்ரிமீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போபாலைசேர்ந்த ரோகித் பாண்டே என்பவர் மும்பையில் உள்ள வெர்சோவா காவல்நிலையத்தில்புகார் அளித்துள்ளார்.

india pm narendra modi the kashmir files
இதையும் படியுங்கள்
Subscribe