Skip to main content

ஒரிஜினலா என கேட்ட தினேஷ்... துப்பாக்கியை தினேஷ் மீது குறிவைத்த நிஜ போலீஸ்...படப்பிடிப்பில் பரபரப்பு !

Published on 12/02/2019 | Edited on 12/02/2019
dinesh

 

நடிகர் தினேஷ் நடிக்கும் "இரண்டாம் உலக்ப்போரின் கடைசி குண்டு "படத்தின் படப்பிடிப்பு சென்னை, மற்றும் புறநகர் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இயக்குனர் பா.இரஞ்சித்தின் உதவியாளர் அதியன் ஆதிரை இயக்கும் இந்த படத்தில் தினேஷ், ஆனந்தி, ரித்விகா, ராம்தாஸ், லிங்கேஷ், ஜான்விஜய், ஜானிஹரி, வினோத் உள்ளிட்டவர்கள் நடித்து வருகிறார்கள். நீலம் புரொடக்சன் பா.இரஞ்சித் தயாரிக்கிறார். கிஷோர் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளை சண்டைப்பயிற்சியாளர் சாம், மற்றும் இயக்குனர் அதியன் ஆதிரை சென்னை புறநகர் தேசிய நெடுஞ்சாலையில் இரவில் எடுத்துகொண்டிருந்தனர். நாயகன் தினேஷ் வேகமாக செல்லும் லாரியில் தொங்கிக்கொண்டு சண்டைபோடும் காட்சிகளை படமாக்கிக்கொண்டிருந்தனர். கேமரா லாரிக்குள் இருந்ததால் ரோட்டில் செல்வோருக்கு நிஜமாக ஏதோ லாரியில் நடக்கிறது என்பது போன்ற தோற்றத்தை கொடுத்திருக்கிறது. அந்த நேரத்தில் அந்த வழியே வந்த ஸ்பெஷல் கமாண்டோ படை வீரர்கள் நிஜமாகவே லாரியில் ஏதோ நடக்கிறது என்று லாரியை சுத்தி வளைத்துப் பிடித்தனர். 

 

 

இதை அறிந்திராத நாயகன் ' நமக்குத்தெரியாமல் இது என்ன புதுசா கமாண்டோ வீரர்கள் எல்லாம் சீன்ல வராங்களே' இது சீன்லயே இல்லியே என்று அதிர்ச்சியடையாமல் சுற்றி வளைத்த போலீசார் வைத்திருந்த துப்பாக்கிகளை பார்த்து இது என்ன ஒரிஜினல் மாதிரியே இருக்கு..? என்று கேட்க, நிஜ போலீசார் துப்பாக்கியை தினேஷ் மீது குறிவைக்க, இயக்குனர் சூட்டிங், சூட்டிங், என்று சத்தம்போட அதற்கு பிறகே தினேஷ் அதிர்சியடைந்திருக்கிறார். நெருங்கி வந்த வீரர்கள் தினேஷ் முகத்தை கவனித்தபிறகே நிஜமான சூட்டிங் என்று உறுதிபடுத்தியுள்ளனர். இதனால் சாலையில் லேசாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கிளம்பும்போது நிஜமாக இருக்கிறது படப்பிடிப்பு வாழ்த்துக்கள் தினேஷ் என்று பாராட்டிவிட்டு சென்றிருக்கிறார்கள் கமாண்டோ படைவீரர்கள். கடைசிகட்ட படப்பிடிப்பில் இருக்கும் "இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு" படப்பிடிப்பு காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

''இந்த படத்துல நடிச்சதுக்கு நான் இன்னும் அவருக்கு காசு கொடுக்கல'' - பா.ரஞ்சித்

Published on 22/11/2019 | Edited on 22/11/2019

பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பான “இரண்டாம் உலகப்போரின் குண்டு” படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அப்போது விழாவில் கலந்துகொண்ட இயக்குனர், தயாரிப்பாளர் பா.ரஞ்சித் இப்படம் குறித்து பேசியபோது....  

 

pa ranjith

 

''எல்லோருடைய நம்பிக்கையாக நீலம் புரொடக்ஷன்ஸ் மாறவேண்டும் என்பது என் விருப்பம். உங்களுடைய ஆதரவோடு இன்னும் நிறைய படங்கள் தயாரிக்க உள்ளோம். எங்களோட இரண்டாவது தயாரிப்பு இது. ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறோம். இந்தப்படம் நிச்சயம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். இந்த படம் தயாரிக்க நிறைய பேர் எனக்கு உதவி செய்துள்ளனர். குறிப்பாக என்னுடன் சேர்ந்து கலை இயக்குனர் ராமலிங்கம், பாம்பே வேலன், லேன்பு வேல் ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் நன்றி. இப்படத்தை குறித்த நேரத்தில், குறைவான செலவில் முடித்துக்கொடுத்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நன்றி. படத்தில் நடித்த கலைஞர்கள் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தனர்.

 

 

சில நடிகர்கள் குறைவான சம்பளம் வாங்கி நடித்துக்கொடுத்தனர். சொல்லப்போனால் நடிகர் ஜான் விஜய் இப்படத்தில் நடித்ததற்கு நான் இன்னும் சம்பளம் கொடுக்கவில்லை. அவரும் இதுவரை காசு கேட்கவில்லை. இவரை போல படத்தில் நடித்த நடிகைகளும் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தனர். சொல்லக்கூடாத, சொல்லமுடியாத கதைகளை சொல்லத்தான் நாங்கள் சினிமாவிற்குள் நுழைந்தோம். அதுபோல் கதையம்சம் கொண்ட நல்ல நல்ல சமீபத்தில் படங்கள் வெளியாகி வெற்றிபெற்றுள்ன. குறிப்பாக அசுரன் மற்றும் கைதி படங்களின் வெற்றி மிக முக்கியமான வெற்றியாக பார்க்கப்படுகிறது. இது பலபேருக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது. எங்கள் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தில் இதுபோன்ற நிறைய படங்களை இனி வரும் காலங்களில் தயாரிக்க உள்ளோம்'' என்றார்.

 

Next Story

நவம்பரில் வெளியாகும் பா.ரஞ்சித் படம் 

Published on 09/10/2019 | Edited on 09/10/2019

பரியேறும் பெருமாள் படத்தின் பெரும் வெற்றிக்கு பிறகு நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் இயக்குனர் பா. ரஞ்சித்தின்  தயாரிப்பில் இரண்டாவது படமான 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடித்து வெளியீட்டிற்கு தயாராக இருக்கிறது.
 

iukg


தினேஷ், ஆனந்தி நடிப்பில் பா. ரஞ்சித்தின் உதவியாளர் அதியன் ஆதிரை இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் டென்மா இசையமைத்திருக்கிறார். கிஷோர் ஒளிப்பதிவு, கலை இயக்குனராக த.இராமலிங்கம், படத்தொகுப்பை செல்வா கவனிக்க விரைவில் இப்பட பாடல்கள் வெளியீடு நடைபெற இருக்கிறது.

puppy trailer

ஜனரஞ்சகமான கதையமைப்பில், மக்கள் ரசிக்கும்விதத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் வட தமிழகத்தின் வாழ்வியலோடு உலக அரசியலோடு இணைத்து படம் பார்ப்பவர்களுக்கு புது அனுபவத்தை தரும் வகையில் படம் அமைந்திருப்பதாக கூறப்படும் நிலையில் இப்படம் வரும் நவம்பரில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

sss