Advertisment

“மீரா மிதுனை விரைவில் கைது செய்வோம்...” - நீதிமன்றத்தில் போலீஸ் தகவல்

police court that they will arrest Meera Mithun soon

Advertisment

மாடல்அழகியும், நடிகையுமான மீராமிதுன்சில மாதங்களுக்கு முன்பு பட்டியலினத்தவர் குறித்து அவதூறாகப் பேசிவீடியோவெளியிட்டார். அது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மீராமிதுன்மீது காவல்துறையில் புகார் அளித்திருந்தனர். இந்த வழக்கு தொடர்பாக மீராமிதுனும்அவரது நண்பர் சாம் அபிஷேக்கும் கைது செய்யப்பட்டு பின்பு நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

பின்பு இந்த வழக்கு கடந்த 6-ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது இரண்டாவது குற்றவாளியான சாம் அபிஷேக் மட்டும் நேரில் ஆஜரானார். ஆனால் மீராமிதுன்ஆஜராகவில்லை. அதனால்அவருக்கு எதிராகஜாமீனில் வெளிவர முடியாதபிடிவாரண்ட்பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டார்.

இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணை வந்தபோது, நீதிமன்ற உத்தரவின்படி மீரா மிதுனை வேளச்சேரி மற்றும் சேத்துப்பட்டில் தேடியும் கிடைக்கவில்லை. அவர் பெங்களூருரில் தலைமறைவாக இருப்பதாக தெரியவந்துள்ளதாகவும், விரைவில் மீரா மிதுனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்துஉத்தரவிட்டுள்ளார்.

tamil cinema actress meera mitun
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe