ரன்வீர் சிங் மீது காவல் நிலையத்தில் புகார்

Police complaint against Ranveer Singh in mumbai

இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக வளம் வரும் ரன்வீர் சிங் தற்போது 'சர்க்கஸ்', 'ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி' உள்ளிட்ட சில படங்களில் நடிக்கிறார். இதனிடையே ரன்வீர் சிங் நடிப்பது மட்டுமின்றி ஃபேஷன் மற்றும் மாடலிங்கிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு ரன்வீர் சிங் ஒரு மேகசின் அட்டை படத்திற்காக ஆடை இல்லாமல் நிர்வாணமாக போஸ் கொடுத்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இவரது புகைப்படத்திற்கு பலரும் ஆதரவாகவும் விமர்சனம் செய்தும் கருத்து கூறி வந்தனர்.

இது தொடர்பாக பெங்காலி நடிகை மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யுமான மிமி சக்ரவர்த்தி, "இதுவே ஒரு பெண் இதுபோன்று புகைப்படத்தை வெளியிட்டிருந்தால் இந்த சமுதாயம் அதை ஏற்றுக்கொள்ளுமா" என பல கேள்விகளை எழுப்பி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதனை தொடர்ந்து ரன்வீர் சிங்கிற்கு அவரது மனைவி தீபிகா படுகோன் மற்றும் நடிகை ஆலியா பட் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ரன்வீர் சிங் மீது நிர்வாணமான புகைப்படங்களை வெளியிட்டது தொடர்பாக மும்பையில் உள்ள செம்பூர் காவல் நிலையத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றின் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில், "நடிகர் ரன்வீர் சிங் தனது நிர்வாண புகைப்படங்கள் மூலம் பெண்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளார். அவர்களின் கண்ணியத்தை அவமதித்துள்ளார்" என குறிப்பிட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ranveer singh
இதையும் படியுங்கள்
Subscribe