Advertisment

“விஜய்யினா மட்டும் இப்படி பண்றாங்க..” - போலீஸ் தடியடியால் புலம்பிய ரசிகர்கள் 

police baton on Vijay fans

Advertisment

விஜய், பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, சம்யுக்தா, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சென்னை எண்ணூரில் வாரிசு படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும், அதில் விஜய் கலந்து கொள்வதாகவும்தகவல் பரவியதை அடுத்து, அங்கு விஜய்யைபார்க்க அவரது ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டனர். அப்போது விஜய்யை பார்க்க முற்பட்டபோது, போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனால் ஆத்திரமடைந்தரசிகர்கள், நாங்கள் இவ்வளவுபண்றதுஎதுக்கு, எங்க தளபதியை பார்க்க தானே. இப்படி பண்ணா எங்களுக்கு தளபதியேதேவையில்லை. சூர்யா, ரஜினி வந்த மட்டும் அவரது ரசிகர்களை பார்க்க அனுமதிக்கிறாங்க. ஆனால் விஜய் வந்தா மட்டும் இப்படி பண்றாங்க என்று ஆதங்கத்தை புலம்பி தள்ளியுள்ளனர்.

actor vijay varisu movie
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe