Skip to main content

இரவில் கார் பறிமுதல்...காலையில் கார் காணவில்லை என புகார்...தயாரிப்பாளரின் கலாட்டா

Published on 16/03/2018 | Edited on 17/03/2018
pl


சமீபகாலமாக சென்னையில் சொகுசு கார் ஓட்டிச்செல்லும் விஐபிக்கள் மதுபோதையில் வேகமாக ஓட்டி விபத்தில் சிக்குகின்றனர். இதனை தடுக்க போலீஸார் வாகன சோதனையை கடுமையாக்கி துரித நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றிரவு போலீஸார் வழக்கம் போல் நடத்திய வாகன சோதனையில் பிரபல சினிமா படத் தயாரிப்பாளர் பிஎல் தேனப்பன் மதுபோதையில் கார் ஓட்டி வந்து சிக்கினார். நேற்றிரவு 11.45 மணி அளவில் ராயப்பேட்டை போக்குவரத்து ஆய்வாளர் ரவி கதீட்ரல் சாலை, சோழா ஹோட்டல் முன்பு வாகன தணிக்கை செய்துக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த TN01 AZ 9939 நம்பர் கொண்ட ஹோண்டா சிட்டி சொகுசு காரை மடக்கி சோதனை செய்தனர்.  அப்போது காரை ஒட்டி வந்த தேனப்பன் மது அருந்தியிருந்தார். இதனையடுத்து அவரை உடனடியாக போலீசார் கைது செய்து, பின்னர் ஜாமீனில் விடுவித்தனர். மேலும் அவரது கார் பறிமுதல் செய்யப்பட்டு, ஓட்டுநர் உரிமமும் பரிமுதல் செய்யப்பட்டது. தேனப்பன் வீடு வீடு ராயப்பேட்டை நெடுஞ்சாலை அரிஹந்த் அப்பார்ட்மெண்ட்டில் உள்ளது. எனவே போலீஸார் அவரை அனுப்பி வைத்தனர். ஆனால் அவரது காரை தர மறுத்துவிட்டனர்.இந்நிலையில் இன்று அதிகாலை 2.00 மணி அளவில்  ராயபேட்டை காவல் நிலையத்தில் தனது காரை காணவில்லை என தேனப்பன் புகார் அளிக்க சென்றுள்ளார். ஆனால் கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, நீதிமன்றத்தில் அபராதம் கட்டிய பின்னரே விடுவிக்கப்படும், இது போன்ற புகார் அளிக்கக்கூடாது என்று போலீஸார் எச்சரித்து அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.தற்போது தேனப்பன் கார் எங்குள்ளது என்று தெரியவில்லை. ஊடகங்கள் கண்ணில் படாமல் இருக்க போலீஸார் மறைவான ஒரு இடத்தில் நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. 

சார்ந்த செய்திகள்

Next Story

"பேரன்பு படத்தின் ஒவ்வொரு காட்சியும் நிஜம்"

Published on 12/02/2019 | Edited on 12/02/2019

42 வயது சிறப்பு பெண் குழந்தையின் தாய் மரியா, தன் குழந்தையின் நிலையை கண்டபிறகு அதைக்குறித்து தேடிப் படிக்க ஆரம்பித்திருக்கிறார். ஒருகட்டத்தில் சிறப்பு குழந்தைகளுக்கான அமைப்புகளில் பணியாற்றி, பின் தனியாக சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளியையே துவங்கியிருக்கிறார். தன் மகளுடன் பேரன்பு படத்தை பார்த்த மரியா, திரைப்படம் குறித்தும் அதன் மீது வைக்கப்படுகின்றன விமர்சனங்கள் குறித்தும் நம்மிடம் பகிர்ந்துகொண்ட நேர்காணல் இது. 

 

Next Story

"பேரன்பு எங்களுக்கான படம் இல்ல" (வீடியோ)

Published on 07/02/2019 | Edited on 07/02/2019

"அஞ்சலி படமும் மணிரத்னமும் என் வாழ்க்கைல மறக்க முடியாத விஷயங்கள். என் குழந்தை ஒரு சிறப்புக் குழந்தை. அவன் பிறந்து 6 நாள்ல அஞ்சலி வந்துச்சு. அந்த படம் பாத்துட்டு கண்ணீரோட வெளிய வந்தேன். அதுல இருந்த சில காட்சிகள், வசனங்கள் எனக்காகவே உருவாக்கப்பட்ட மாதிரி இருந்துச்சு. அன்னைல இருந்து இன்னைக்கு வரைக்கும் 28 வருஷமா என் பையன நினைச்சு ஒருநாள் கூட அழுதது இல்ல. அப்படி ஒரு தெளிவ அந்த படமும் அந்த இயக்குனரும் எனக்கு கொடுத்து தெளிவு அப்படிப்பட்டது. அப்படிப்பட்ட தாக்கத்த உண்டாக்கியிருக்க வேண்டிய படம் பேரன்பு. ஆனா உருவாக்கல. அது மட்டும் இல்ல... எங்கள மாதிரி சிறப்பு குழந்தைகள பெத்தவங்களுக்கு மிகப்பெரிய காயத்தயும் ஏற்படுத்தியிருக்கு பேரன்பு"

ஒரு சிறப்புக் குழந்தையின் தந்தை பேரன்பு திரைப்படத்தை பார்த்துவிட்டு நமக்கு அளித்த நெகிழ்ச்சியான நேர்காணல்!