Advertisment

நடிகை சனம் ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய கல்லூரி மாணவர் கைது!

sanam shetty

அம்புலி, மாயை, விலாசம் உள்ளிட்ட தமிழ்ப்படங்களில் நடித்த நடிகை சனம் ஷெட்டி, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு கிடைத்த பட வாய்ப்புகளில் தற்போது நடிகை சனம் ஷெட்டி கவனம் செலுத்திவருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் சனம் ஷெட்டி, தன்னுடைய புகைப்படங்களை அடிக்கடி பதிவேற்றுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்த நிலையில், நடிகர் சனம் ஷெட்டிக்கு மர்ம நபர் ஒருவர் தொடர்ந்து ஆபாசமாக மெசேஜ் அனுப்பிவந்துள்ளார்.

Advertisment

இதையடுத்து, தனக்கு இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் வாயிலாக மர்ம நபர் ஒருவர் தொடர்ந்து ஆபாசமாக மெசேஜ் மற்றும் புகைப்படங்களை அனுப்பி வருவதாக அடையாறு சைபர் பிரிவில் நடிகை சனம் ஷெட்டி புகாரளித்தார். மேலும், அதற்கான ஆதாரங்களையும் சைபர் பிரிவு போலீஸாரிடம் வழங்கினார்.

Advertisment

நடிகை சனம் ஷெட்டி அளித்த புகாரின் பேரில் சைபர் பிரிவு போலீஸார் நடத்திய விசாரணையில், இந்தச் செயலில் ஈடுபட்டது ராய் ஜான் பால் எனக் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அந்த விசாரணையில் 21 வயதான ராய் ஜான் பால் திருச்சியைச் சேர்ந்தவர் என்பதும் அவர் ஒரு கல்லூரி மாணவர் என்பதும் தெரியவந்தது. அவரைக் கைது செய்த சைபர் பிரிவு போலீஸார் விசாரணைக்குப் பிறகு திருவான்மியூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தற்போது திருவான்மியூர் போலீஸார் ராய் ஜான் பாலிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.

sanam shetty
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe