Advertisment

சிம்பு படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது!

simbu

நடிகர் சிம்புவின் நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான படம் 'போடா போடி'. இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் அறிமுகமானார். தரண்குமார் இசையமைக்க, இப்படத்தை பதம் குமார் தயாரித்திருந்தார். இப்படத்திற்கு ரசிகர்களிடையே கணிசமான வரவேற்புகிடைத்ததையடுத்து, இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க தயாரிப்பாளர் திட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது.

Advertisment

இப்படத்திலும் நாயகனாக சிம்பு நடிக்க, அவருக்குச் ஜோடியாக ரித்திகா பால் நடிக்கிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் மாநாடு படத்தில் கவனம் செலுத்தி வரும் சிம்பு, அப்படத்திற்கு பிறகு மற்றுமொரு படத்தில் நடிக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து, அவர் போடா போடி படத்தில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு ஜூன் மாதம் தொடங்கவுள்ளது. முதல் பாகம் போலவே இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பையும் வெளிநாட்டில் படமாக்கத் திட்டமிட்டுள்ள தயாரிப்பாளர், இப்படத்தின் இயக்குனர் யார் என்பதில் ரகசியம் காத்து வருவதாகக் கூறுகின்றனர் நமக்கு நெருங்கிய சினிமா வட்டாரங்கள்.

Advertisment

maanadu Simbu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe