Advertisment

அஜித் பட நடிகர் மீது போக்சோ வழக்கு

pocso case against Mahesh Manjrekar

நடிகரும் இயக்குநருமானமகேஷ் மஞ்ச்ரேக்கர் "நய் வரன் பாட் லோன்சாகோன் நய் கோன்சா" என்ற மராத்தி படத்தை இயக்கியிருந்தார். இப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் அதில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் குறித்துஆபாசமாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி சர்ச்சைகள் கிளம்பியது. இதனைதொடர்ந்து படத்தின் இயக்குநர் மகேஷ் மஞ்சரேக்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி மும்பை பாந்த்ரா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி படத்தின் இயக்குநர்மகேஷ் மஞ்ச்ரேகர்மற்றும் படத்தின் தயாரிப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யஉத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்துமும்பை மாஹிம்காவல்துறைமகேஷ் மஞ்ச்ரேக்கர் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து இயக்குநர்மகேஷ் மஞ்ச்ரேக்கர்கூறுகையில், " இந்த படத்தில் பெண்களை தவறாக சித்தரிக்கவில்லை.இது வயது வந்தோருக்கான படம். தணிக்கை செய்யப்படும் போதுகூட தணிக்கை குழு எந்த விதமான ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை" எனக் கூறியுள்ளார். தெலுங்கு, மராத்தி, பெங்காலிஉள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளமகேஷ் மஞ்ச்ரேக்கர்தமிழில் அஜித் நடிப்பில் வெளியான 'ஆரம்பம்' படத்திலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'வேலைக்காரன்' படத்திலும்நடித்துள்ளதுகுறிப்பிடத்தக்கது.

Advertisment

POCSO ACT mahesh majrekar ACTOR AJITHKUMAR
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe