Advertisment

விஜய் ஆண்டனி படத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டு

Ramadas praise Vijay Antony kodiyil oruvan film

இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான திரைப்படம் 'கோடியில் ஒருவன்'. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்திருந்தார் கடந்த ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடுபலரிடம் பாராட்டுகளை பெற்றது.

Advertisment

இந்நிலையில் 'கோடியில் ஒருவன்' படத்தை பார்த்த பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், "ஒரு அரசியல்வாதி எவ்வாறு இருக்க வேண்டும்... எவ்வாறு இருக்கக் கூடாது, ஓர் அரசியல் கட்சி எவ்வாறு இருக்க வேண்டும்... எவ்வாறு இருக்கக் கூடாது, மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்... யாருக்கு வாக்களிக்கக் கூடாது, என்பதை விளக்கும் திரைப்படம் தான் 'கோடியில் ஒருவன்'. இந்த திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது" எனக்குறிப்பிட்டுள்ளார்.இதனை தொடர்ந்து படத்தின் இயக்குநர் ஆனந்த் கிருஷ்ணன் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Advertisment

DR.RAMADOSS kodiyil oruvan PMK PARTY vijay antony
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe