இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவான ‘ஜெய் பீம்’ திரைப்படம் கடந்த 2ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியானது. 90களில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
‘ஜெய் பீம்’ படத்தில் பழங்குடி மக்களை சித்திரவதைப்படுத்தும்காவல்துறை அதிகாரி குருமூர்த்தி வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் போல்காட்சி அமைக்கப்பட்டுள்ளதாகவும், படத்தின் ஒரு காட்சியில் அவரது வீட்டில் வன்னியர் சங்கத்தின்காலண்டர் இடம்பெற்றிருப்பதாகவும் கூறி அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் கண்டனங்களை எழுப்பினர். அதன் பின் ‘ஜெய் பீம்’ படத்தின் காட்சியில் மாற்றம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பாமகஇளைஞரணித்தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ், ‘ஜெய் பீம்’ படம் குறித்து நடிகர் சூர்யாவுக்கு 9 கேள்விகள் கொண்ட கடிதம் எழுதினார். இதற்கு சூர்யாவும் அறிக்கை வாயிலாக பதிலளித்தார்.
இதையடுத்துவன்னியர் சமூகத்தைத்தவறாக சித்தரித்ததற்காக 24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் நஷ்டஈடாக 5 கோடி தர வேண்டும் என சூர்யா உள்படஜெய் பீம் படக்குழுவினருக்கு வன்னியர் சங்கம் சார்பில் நோட்டீஸ்அனுப்பப்பட்டது.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாமகவழக்கறிஞர் பாலு," ஜெய் பீம் படம் விவகாரத்தில் அனுப்பப்பட்ட நோட்டிஸுக்குஇன்னும் சூர்யா தரப்பில் இருந்து பதில் வரவில்லை. மேலும் நஷ்டஈடாக கேட்ட 5 கோடி தொகை கிடைக்கப் பெற்றால் பாதிக்கப்பட்ட பார்வதி அம்மாளுக்கு வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.