/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/16_17.jpg)
பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்ட 'பி.எம். நரேந்திர மோடி' என்ற திரைப்படம் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தில், மோடியின் கதாபாத்திரத்தில் நடிகர் விவேக் ஓபராய் நடித்திருந்தார். இந்த நிலையில், மோடியின் வாழ்க்கை வரலாறு மீண்டும் திரைப்படமாகவுள்ளது.
'ஏக் அவுர் நரேன்' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், மோடி கதாபாத்திரத்தில் பிரபல டி.வி. நடிகர் கஜேந்திர சவுகான் நடிக்கிறார். இப்படத்தை, டெல்லியில் பாலியல் வன்கொடுமையால் மரணம் அடைந்த நிர்பயா கதையை இயக்கிய வங்காள இயக்குனர் மிலன் பவுமிக் இயக்குகிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பானது மார்ச் 12-ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது. கொல்கத்தா மற்றும் குஜராத்தில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ள படக்குழு, மோடியின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ஆம் தேதி படத்தைத் திரைக்குக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)