Advertisment

இளையராஜாவிற்கு பிரதமர் மோடி நன்றி

pm modi thanks ilaiyaraaja modiyum ambedkarum book

'மோடியும் அம்பேத்கரும்' என்ற தலைப்பில் வெளியாகியுள்ள புத்தகத்தில் அணிந்துரை பகுதியில் இசையமைப்பாளர் இளையராஜா மோடி தொடர்பாக புகழ்ந்து எழுதியிருந்தார். மேலும் அதில் அண்ணல் அம்பேத்கரையும், பிரதமர் மோடியையும் ஒப்பிட்டு இளையராஜா எழுதியுள்ளதாக கூறி தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.பிரதமர் நரேந்திர மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிடுவது தவறானது என்று ஒருதரப்பும், இல்லை அது சரியான கருத்து என்று மற்றொரு தரப்பும்இருவேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.இதனிடையே இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா கருப்புதிராவிடன், பெருமைமிகு தமிழன் என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.

Advertisment

இந்நிலையில் பிரதமர் மோடி இளையராஜாவுக்கு நன்றி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தன்னைப் பற்றி'மோடியும் அம்பேத்கரும்' என்ற புத்தகத்தில் அணிந்துரை எழுதியதற்காக இளையராஜாவை தொலைபேசியில் மூலம் தொடர்புகொண்டு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisment

Ilaiyaraaja india pm narendra modi pm modi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe