Advertisment

ராஷ்மிகாவிற்கு பதிலளித்த பிரதமர் மோடி

modi replied to rashmika

ராஷ்மிகா மந்தனா தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகும் குபேரா படத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்தியில், விக்கி கௌஷல் நடிப்பில் உருவாகும் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். தெலுங்கில் புஷ்பா 2, ரெயின்போ, தி கேர்ள்ஃபிரண்ட் உள்ளிட்ட படங்களைக் கைவசம் வைத்துள்ளார்.

Advertisment

அண்மையில் ராஷ்மிகா நாட்டிலேயே மிக நீளமான கடல்வழி பாலமாக அமைக்கப்பட்டுள்ள அடல் சேது பாலம் குறித்து பிரதமர் மோடியின் ஆட்சியைப் புகழ்ந்து பேசினார். ஒரு நேர்காணலில் பேசிய அவர், “அடல் சேது பாலத்தால் 2 மணி நேர பயணம் 20 நிமிடமாக மாறியுள்ளது. இது சாத்தியம் என யாராவது நினைத்துப் பார்த்திருப்போமா. நவி மும்பையில் இருந்து மும்பை நகரம், கோவாவிலிருந்து மும்பை, பெங்களூருவிலிருந்து மும்பை என அனைத்து வழி பயணங்களும் மிக எளிதாக மாறியுள்ளது. அதன் உள்கட்டமைப்பும் அற்புதமாக உள்ளது. இது எனக்கு பெருமையாக இருக்கிறது.

Advertisment

இந்தியா ஒரு போதும் நின்றுவிடுவதில்லை. நாட்டின் வளர்ச்சியைப் பாருங்கள். கடந்த 10 ஆண்டுகளில் நாடு எப்படி வளர்ந்திருக்கிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. நம்மிடம் இருக்கும் திட்டம், சாலைத் திட்டமிடல், உள்கட்டமைப்பு, எல்லாமே மிகவும் புத்திசாலித்தனமானது. இந்தியா ஸ்மார்ட்டான நாடு. இளம் தலைமுறையைக் கொண்ட இந்த நாடு மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இளைஞர்கள் இப்போது மிகவும் பொறுப்புடன் இருக்கிறார்கள். இளம் பாரதியார்கள் வாக்களிக்க வேண்டும். இப்போது அவர்களுக்கு அந்தப் பொறுப்பு உண்டு. நாடு சரியான பாதையை நோக்கி செல்கிறது” என்றார்.

இதையடுத்து இது தொடர்பான வீடியோ ஒன்றை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் ராஷ்மிகா. இந்த வீடியோவை பிரதமர் மோடி அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, “மக்களை இணைப்பதையும் வாழ்க்கையை மேம்படுத்துவதையும் விட திருப்திகரமானது எதுவும் கிடையாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Narendra Modi rashmika mandana
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe