பிரதமர் மோடி இளையராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கினார்

pm modi confers honorary doctorate to ilaiyaraja

தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே இருக்கக்கூடிய காந்திகிராமம் பல்கலைக்கழகத்தில் இன்று (11.11.2022) பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பிரதமர் மோடி இந்த விழாவில் கலந்துகொண்டு மாணவர்களுக்குப்பட்டங்களை வழங்கினார். இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோரும் பங்கேற்றனர்.

இந்த விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன் ஆகியோருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பிரதமர் மோடி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கினார். மேலும் மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன் பிரதமர் மோடி கையால் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றார்.

மாநிலங்களவை நியமன எம்.பி.யாக பதவி வகித்து வரும் இளையராஜா மூன்றாவது முறையாகக் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக அண்ணா பல்கலைக்கழகமும் மற்றும் விக்னன் பல்கலைக்கழகம் இளையராஜாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Ilaiyaraaja pm modi
இதையும் படியுங்கள்
Subscribe