Advertisment

பாடகர் பப்பி லஹரியின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் 

pm modi condoles singer bappi lahiri

பிரபல பாலிவுட் இசையமைப்பாளர், பாடகர் பப்பி லஹரி (69) உடல்நலக்குறைவு காரணமாகமும்பையில் இன்று காலமானார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார்.மூச்சுதிணறல்காரணமாக கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் மறைவு இசை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் அவரின்மறைவுக்கு திரை நட்சத்திரங்கள், அரசியல் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

அந்தவகையில்பாடகர் பப்பி லஹரி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில்," பப்பி லஹரியின்இசை அனைத்தையும் உள்ளடக்கிய பல்வேறு உணர்வுகளை உள்ளடக்கியதாக இருந்தது. தலைமுறை தலைமுறையாக மக்கள் பப்பி லஹரியின்படைப்புகளைதொடர்பு படுத்திக் கொள்ள முடியும், அவரது மறைவு வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு எனதுஆழ்ந்த இரங்கல்" எனக்குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

singer Bappi Lahiri PM NARENDRA MODI
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe