Advertisment

இளையராஜாவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!

Advertisment

pm modi birthday wishes to ilaiyaraaja

இசைஞானி இளையராஜா தனது இசையால் இந்திய ரசிகர்கள் மட்டுமல்லாதுஉலக ரசிகர்களையும் கட்டிப் போட்டுள்ளார். திரைத்துறையில் தனது நீண்டபயணத்தில் காதல், கண்ணீர், மகிழ்ச்சி உள்ளிட்ட அனைத்து உணர்வுகளுக்கும் பொருந்தும் வகையில் தனித்தனியே இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழி படங்களுக்கு இசையமைத்து அனைத்து மொழி ரசிகர்களின்இதயங்களையும் வென்றுள்ளார்.

Advertisment

இந்நிலையில் இசையமைப்பாளர்இளையராஜா தனது 80 வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இவரின்பிறந்த நாளை முன்னிட்டு திரை பிரபலங்கள் ரசிகர்கள், தலைவர்கள் எனப் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் இந்திய பிரதமர் மோடி இளையராஜாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இளையராஜா சமீபத்தில் 'மோடியும் அம்பேத்கரும்' என்ற புத்தகத்தில் மோடியை அம்பேத்கருடன்ஒப்பிட்டு எழுதியிருந்தார். இது பெரும் சர்ச்சைகளை கிளப்பியதோடு,பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Ilaiyaraaja india pm narendra modi
இதையும் படியுங்கள்
Subscribe