/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/110_29.jpg)
ஆதித்யா சுஹாஸ் ஜம்பாலே இயக்கத்தில் யாமி கவுதம், பிரியா மணி, அருண் கோவில் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஆர்டிக்கிள் 370’. பி62 ஸ்டூடியோஸ், தயாரிப்பில் ஜியோ ஸ்டூடியோஸ் வழங்கும் இப்படத்திற்கு ஷஷ்வத் சச்தேவ் இசையமைத்துள்ளார். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கு உருவாக்கப்பட்ட சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் இப்படம் உருவாகியுள்ள நிலையில், வருகிற 23 ஆம் தேதி இந்தியில் இப்படம் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், இப்படம் குறித்து பிரதமர் மோடி பேசியுள்ளார். ஜம்மு-காஷ்மீரில் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் வளர்ச்சிக்கான முக்கியதடையாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவு இப்போது நீக்கப்பட்டுள்ளது. அப்பிரிவு ரத்து செய்யப்பட்டதால், தேர்தலில் பாஜக 370 இடங்களிலும், என்டிஏ கூட்டணி 400 இடங்களிலும் வெற்றிபெற உதவுமாறு மக்களைக் கேட்டுக் கொள்கிறேன். இந்த வாரம் சட்டப்பிரிவு 370 பற்றிய திரைப்படம் வெளியாகும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். மக்கள் சரியான தகவலைத் தெரிந்துகொள்ள இப்படம் உதவும். அது நல்ல விஷயம்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)