Advertisment

"ப்ளீஸ் இதை நிறுத்துங்கள்" - நெல்சன் குறித்து ஆர்.ஜே பாலாஜி பதில்

publive-image

Advertisment

தமிழ் சினிமாவில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான ஆர்.ஜே.பாலாஜி எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட படங்களில் நடித்து கதாநாயகனாகவும் அவதாரம் எடுத்தார். இப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது இந்தியில் வெற்றி பெற்ற ‘பதாய் ஹோ’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்துள்ளார். 'வீட்ல விசேஷம்' என்று தலைப்பு வைத்துள்ள இப்படத்தில் அபர்ணா பாலமுரளி, சத்யராஜ், ஊர்வசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆர்.ஜே. பாலாஜி மற்றும் என்.ஜே.சரவணன் இயக்கியுள்ள இப்படம் ஜுன் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதனால் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகின்றனர்.

ஆர்.ஜே. பாலாஜி, 'வீட்ல விசேஷம்' படத்தின் ப்ரோமோஷனுக்காக தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவிற்கு ரசிகர் ஒருவர் 'இதே போல் தான் இயக்குநர் நெல்சனும்' எனக்குறிப்பிட்டு நெல்சனை விமர்சனம் செய்து கமன்ட் செய்திருந்தார்.

இந்நிலையில் ஆர்.ஜே. பாலாஜி இந்த பதிவிற்கு ரிப்ளை செய்துள்ளார். இது குறித்தான ட்விட்டர் பதிவில், " நெல்சன் ஒரு நல்ல இயக்குநர். நான் அவருடன் பல நிகழ்ச்சிகளில் பணியாற்றியிருக்கிறேன், அவருடைய படங்களின் தீவிர ரசிகனும் கூட. அவர் ஒரு அற்புதமான திறமை கொண்டவர். எதிர்காலத்தில் அவர் தனது படங்களின் மூலம் நமக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருவார் என்று நான் நம்புகிறேன். ப்ளீஸ் இதை நிறுத்துங்கள்" என குறிப்பிட்டுள்ளார். ரசிகரின் பதிவிற்கு ரிப்ளை செய்துள்ள ஆர்.ஜே. பாலாஜியின் இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

RJ Balaji Veetla Vishesham movie
இதையும் படியுங்கள்
Subscribe