ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று நாளுக்கு நாள் பலரின் ஆதரவுகள் சமூக வலைதளத்தில் வலு சேர்ந்துகொண்டே வருகிறது. நளினி, முருகன். பேரறிவாளன், ராபர்ட் பியஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் மற்றும் சாந்தன் ஆகியோர் கடந்த 28 வருடங்களாக சிறையில் காலத்தை கழித்து வருகின்றனர். இதில் பேரறிவாளனுடைய இளமை பருவம் அனைத்தும் சிறையிலேயே கழிந்துள்ளது.

Advertisment

இந்த நிலையில், சமூகம் சார்ந்த பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வரும் நடிகர் விஜய் சேதுபதி, தற்போது இந்த 7 பேர் விடுதலைக்காகவும் ட்விட்டரில் குரல் கொடுத்திருக்கிறார். அதில், “இது தமிழர்களின் உணர்வு சம்மந்தப்பட்டது மட்டும் அல்ல, மனித உரிமை சமந்தப்பட்டது. தயவு செய்து கருணை வையுங்கள்மரியாதைக்குரிய ஆளுநர்.தற்போதேசெயல்படுத்துங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.