publive-image

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும், கதாநாயகனாகவும் பயணித்து கொண்டு வருபவர் யோகிபாபு. அந்த வகையில் தற்போது ஆர்.கண்ணன் இயக்கும் அடுத்த படத்திலும் ஜான்சன் இயக்கும் 'மெடிக்கல் மிராக்கல்' படத்திலும் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதனிடையே ஓவியாவுடன் இணைந்து முதன்மை கதாபாத்திரத்தில் 'காண்டிராக்டர் நேசமணி' படத்தில் நடித்துள்ளார். அதோடு சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

Advertisment

அந்த வகையில் 'தாதா' படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதில் யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தெரிவித்து அவர் மட்டும் இடம் பெற்றிருக்கும் வகையில் போஸ்டர் வெளியானது. இது தொடர்பாக யோகிபாபு தனது ட்விட்டர் பக்கத்தில் "இந்த படத்தில் நண்பர் நிதின் சத்யா ஹீரோவாக நடித்துள்ளார். நான் நான்கு காட்சிகளில் மட்டுமே நடித்துள்ளேன். தயவுசெய்து இதைப் போன்று விளம்பரம் செய்யாதீர்கள். நன்றி." என படக்குழுவை கண்டித்து பதிவிட்டுள்ளார்.

Advertisment

இதனையடுத்து 'தாதா' படத்தின் கதாநாயகன் நிதின் சத்யா, யோகிபாபுவின் பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, "ஒரு நண்பனை விட்டுகுடுக்காம ரசிகர்களையும் விட்டுகுடுக்காம அந்த மனசு தான்" எனப் பாராட்டியுள்ளார்.